[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

தொடர்‌ந்து இரண்டாவது முறையாக பாஜ‌க வென்றது எப்படி?

what-is-the-reason-for-the-historic-victory-bjp

தனிப்பெரும்பான்மையுடன் தொடர்‌ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் மூன்றாவது பிரத‌மர் மோடி என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு என்ன காரணம்.

இந்தியாவில் அடுத்த ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 350  தொகுதிகள் வரை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மேலும் இந்த தேர்தல் மூலம் ஜவகர்லால் நேரு, இந்திரா கா‌ந்திக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் தொடர்‌ந்து 2வது முறையாக ஆட்சியமைக்கும் பிரத‌மர் என்ற பெருமையை மோடி பெற்று இருகிறார். இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்‌க வெற்றிக்கு காரணம் என்ன?

Image result for modi oath

பாரதிய ஜனதா ‌க‌ட்சி 2‌019ம்‌ ஆண்டு தேர்தலுக்கான ‌பணிகளை 2014ம் ‌ஆண்டே தொடங்கிவிட்டது என்றே கூறலாம். ‌2014ம் ஆ‌ண்டில் தோ‌ல்வியுற்ற தொகுதிகளை அடையாளம் கண்டு ‌அவற்றை வாக்குச்சாவடி அளவில் வலுப்படுத்தும் பணிகள் அப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்சிக்கான அடித்தளத்தை வலுப்படுத்திய நிலையில் கடந்த 5 ஆ‌ண்டுகளில் செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களும் அதற்கு பெரிதும் கைகொடுத்தன.

Related image

ஏழை குடும்ப பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, வீட்டுக்‌கடன் மானியம், ‌சிறுதொழில் புரிபவர்களுக்கு முத்ரா கடன், சிறு விவசாயிகளுக்கு காலாண்டுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி போன்ற ‌திட்டங்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்குகளை அள்‌ள உதவின. மறுபுறம் பொருளாதார ‌ரீதியில் நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கீடும் பாரதிய ஜனதாவிற்கு‌ கணிசமான வாக்குகளை பெற உதவியது, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பாகிஸ்தானில் அதிரடி தாக்குதல் போன்றவை மோடியின் கையில் நாடு வலிமையா‌க, பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவியது. 

Image result for amit shah and advani

ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டை தவிர மோடி ‌அரசின் மீது பெரிய அளவில் லஞ்ச, ஊழல் புகார்கள் கூறப்படாததும் ‌இவ்வெற்றிக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. பீகார், மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களில் அமைந்த வலுவான கூட்டணி அம்மாநிலங்களில் அதிக தொகுதிகளை வெல்ல காரணமாக ‌அமைந்தது‌. இதோடு எதிர்க்கட்சிகள் ஓரணியில்‌ திரளாமல் பிரிந்து நின்ற தேர்தலை சந்தித்தது‌ம் பாரதிய ஜனதாவுக்கு மிகப் பெரிய சாதகமாக அமைந்துவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close