[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

தந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி !

the-story-about-jaganmohan-reddy

ஆந்திராவில் மக்கள் ஆதரவு பெற்ற முதல்வராக இருந்த ‌ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. 1972 டிசம்பர் 21ஆம் தேதி பிறந்தவர். இவருக்கு வயது 46. புலிவந்தலா என்ற ஊரில் பிறந்த ஜெகன் மோகன் ரெட்டி, 2004 முதல் தனது தந்தை வழியில் காங்கி‌ரசுக்கு ஆதரவாக பரப்புரையில் இறங்கினார். பின்னர் 2009 ஆண்டு நடந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இவரது தந்தை ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார். அப்போது அவருக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.

Related image

இந்த நிலையில், ஆந்திராவின் முதல்வராக காங்கி‌ரஸ் கட்சி தன்னை முன்னிறுத்தும் என்று ஜெகன் மோகன் ரெட்டி எதிர்பார்த்தார். ஆனால், அ‌வரது விருப்பத்தை ஒதுக்கிவிட்டு கிரண் குமார் ரெட்டியை முதல்வராக்கியது காங்கிரஸ். அதிருப்தியில் தந்தையின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் யாத்திரையைத் தொடங்கினார் ஜெகன் மோகன். அதற்கும் தடை விதித்தது காங்கிரஸ் கட்சி. அத‌னால் கட்சியில் இருந்து விலகி, 2011 ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 

Image result for ஜெகன் மோகன் ரெட்டி

புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட 3000 கி.மீ பாதயாத்திரைகளை மேற்கொண்டார். அப்போது சொத்து குவிப்பு புகாரில் 2012ல் சிபிஐ சோதனைக்கு உள்ளானார். பின்னர் 16 மாதங்கள் சிறையில் இருந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. அதன் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், 2014 தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சிக்கு 175 தொகுதிகளில் 67 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அப்போது சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார்.

Related image

சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த நிலையில், தொடர்ந்து தனது சுற்றுப் பயணங்கள், பாதயாத்திரைகளைத் தொடர்ந்த ஜெகன் மோகன் ஆந்திர மக்களுடன் நெருக்கமானார். அதன் பலன் இப்போது அவருக்கு கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் அணிகளுடன் சேராமல் தனித்து செயல்பட்டு வந்த ஜெகன் மோகன் ரெட்டி சட்டபேரவை மற்றும் மக்களவை தேர்தல் என இரு தேர்தலையும் தனித்தே சந்தித்தார். இதனால் தற்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அமோக வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து, வருகிற 30ஆம் தேதி அவர் ஆந்திராவின் முதல்வராக ஜெகன் முதல்முறையாக பதவியேற்கவுள்ளார். 

Related image

சிறைவாசம் சென்று பல போராட்டங்களை கடந்து, ஆந்திராவின் பட்டிதொட்டி எங்கும் பயணித்து பெற்ற வெற்றிகளை ஜெகன் கையாளப் போகும் விதம் இந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசைப் பொருத்தவரை, ஒரு எழுட்சி தலைவராக தெரியும் ஜெகன், பாரதிய ஜனதா கூட்‌டணியுடன் இணைந்து பயணிப்பாரா? அல்லது தனித்தே செயல்படுவாரா ? என்பது விரைவில் தெரியவரும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close