[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி !

change-of-guard-in-andhra-pradesh-leads-show-jagan-reddy-ahead

ஆந்திராவில் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாஜக 325 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்ற நிலையில், அங்கு ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்டது. ஆந்திராவில் மொத்தமாக 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக உள்ளார்.  இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 130 முதல் 135 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் தெலுங்குதேசம் கட்சி 37 முதல் 40 இடங்களிலே வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 124 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அந்தக் கட்சி அங்கு ஆட்சியை பிடிக்கும் என்று தெரிகிறது. தெலுங்கு தேசம் கட்சி 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தான் போட்டியிட்ட குப்பம் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். எனவே முதல் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து மாநில தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close