[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

“கண்டிப்பாக நானே வெற்றி பெறுவேன்” - வாக்கு எண்ணிக்கைக்கு முன் ஒலிக்கும் குரல் 

bjp-and-congress-candidate-byte-about-election-voting

‘கண்டிப்பாக நானே வெற்றி பெறுவேன்’ என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முன் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் 54‌2 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குக்கள் எண்ணப்படுகின்றன. 

இதற்கு முன்னதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முன் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், புதுடெல்லியில் பாஜக எம்.பி மீனாட்சி லேக்ஹியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மேகான் கூறுகையில், “கண்டிப்பாக தேர்தல் முடிவுகள் காங்கிரஸ்க்கு சாதகமாகத்தான் வரும். காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராவதை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறோம். டெல்லியில் காங்கிரஸ்க்கும் பாஜகவுக்கும் தான் போட்டி” எனத் தெரிவித்துள்ளார். 

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கலாபுராகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லீகார்ஜூன் கார்கேவை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவ்,  “மோடியே அடுத்த பிரதமர். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார். 

கர்நாடகா பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, “நான் கண்டிப்பாக வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு செல்வேன். இந்த நாட்டில் எனது பங்களிப்பு கண்டிபாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். 

கேரளா திருவனந்தபுரத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன், “மாநில மக்களின் நலனுக்காகவும், ஊழியர்களுக்காகவும் டில்லியில் பாஜக அரசாங்கத்துடன் சேர்ந்து கேரளத்தை நகர்த்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போது கேரளா முக்கியத்துவம் வாய்ந்ததாக வளர்ந்து வருகிறது. நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close