[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

அடுத்த பிரதமர் யார்? 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

india-elections-counting-to-begin-at-8-am-today

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த பிரதமர் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.

கடந்த 19-ஆம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது. இதே போல ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும். தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டப்பேரவைத்  தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

சென்னையில் வட சென்னை தொகுதி வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியில் எண்னப்படுகிறது.

45 மையங்களிலும், ஒரு மையத்துக்கு 14 மேஜைகள் போடப்பட்டு, 19 முதல் 34 சுற்று வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கும். 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கடைசி யாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன.

மதியம் முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், கடந்த தேர்தலை விட முடிவுகள் சற்று காலதாமதமாகவே வெளியாகும் என்று தெரிகிறது. மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரிந்தாலும், இறுதி முடிவுகளை பெறுவதற்கு இரவு ஆகும் என்று தெரிகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close