[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

வாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது? 

how-is-voters-opinion-acknowledged

வாக்காளர் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகைச்சீட்டு எவ்வாறு எண்ணப்பட உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒப்புகைச்சீட்டு எண்ணுவதற்காக 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின் இறுதிச்சுற்றின் போது, மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் பணிக்கான இயர்ந்திரங்கள் தேர்வு, குலுக்கல் முறையில் நடைபெறும். 

5 வாக்குச்சாவடி மையங்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவது குறித்து, வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எழுத்துபூர்வமா‌கத் தெரிவிக்கப்படும். அஞ்சல் அட்டை அளவிலான வெள்ளை நிறக் காகித அட்டைகள் குலுக்கலுக்கு பயன்படுத்தப்படும். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெள்ளை நிற அட்டைகளின் எண்ணிக்கையும் இருக்கும். அந்த அட்டையில், சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத் தொகுதி எண், பெயர், வாக்குப் பதிவு செய்யப்பட்ட நாள், வாக்குச்சாவடி மைய எண் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். காகித அட்டைகள் 4 மடிப்புகளாக மடிக்கப்படுவதால் விவரங்கள் வெளியே தெரியாது.

நன்கு குலுக்கப்பட்ட பெட்டியில் இருந்து, 5 காகித அட்டைகளைத்தெரிவு செய்து,அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் ஒப்புகைச்சீட்டுகள், ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட மையத்தில் வைத்து எண்ணப்படும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close