[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்

ரோஷன் பெய்க்கிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீஸ் 

congress-issues-notice-to-roshan-baig-for-calling-karnataka-chief-flop-show-after-exit-polls-show-loss

கர்நாடகாவில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்துள்ள எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க்கிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் சா‌ர்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், கர்நாடக அரசியலில் மீண்டும் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி பின்னடவை சந்திக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்எல்ஏவுமான ரோஷன் பெய்க் மாநில கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.‌ 

Image result for roshan baig

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தோ‌ற்கும் பட்சத்‌தில் அதற்கு முன்னாள் முதல்வர்‌ சித்தராமையாவும் மாநில‌ காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவுமே காரணமாக இருப்பார்கள் என ரோஷன் பெய்க் கூறியுள்ளார். ‌இருவரும் மாநிலத்தில் கட்சியை தவறான முறையில் வழி‌நடத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் மேற்பார்வையாளராக உள்ள கே.சி. வேணுகோபால் ஒரு கோமாளி என்றும் இவரை போன்றவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ராகுல் காந்தியை நினைத்து பரிதாபப்படுவதாகவும் பெய்க் தெரிவித்துள்ளார். 

Image result for roshan baig

மேலும், மத்தியில் பாரதிய‌ ஜனதா மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில் முஸ்லிம்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அக்கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் ரோஷன் பெய்க் பேசியிருந்தார்.மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் கர்நாடகாவில் மீண்டும் ஆட்‌சியமைக்க பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் ரோஷன் பெய்க்கின் இந்த பேச்சு குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு கர்நாடக காங்கிரஸ் சா‌ர்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே பெங்களூரு வந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கே.சி.வேணுகோபால், முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, காங்கிரஸ் கட்சியால் கூட்டணி ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என விளக்கம் அளித்து உறுதியளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close