[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்

எதிர்க்கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி ! முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை..!

pawar-reaches-out-to-kcr-naveen-to-cement-oppn-unity

நாடே எதிர்பார்க்கும் மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. பெருவாரியான கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறுகின்றன. ஆனால் கருத்துக் கணிப்புகள் பொய்யான சம்பவங்களையும் இதற்கு முன் நாம் பார்த்திருக்கிறோம்.

கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்கு சாதமாக அமையும் என கூறினாலும் பெருவாரியான அரசியல் கட்சித் தலைவர்கள் தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என எதிர்பார்க்கின்றனர். அப்படி தொங்கு பாராளுமன்றம் ஒருவேளை அமைந்தால் என்ன செய்ய வேண்டும் என்றும் அதற்கான பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவாரும் பலகட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தால், அந்த நேரத்தில் எந்தெந்த கட்சித் தலைவர்களின் பங்கு முக்கியமாக அறியப்படுமோ அந்த தலைவர்களுடன் சரத் பவார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

பிஜு ஜனதா தள தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்தை தொடர்பு கொண்டு சரத் பவார் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவுடன் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதனிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சரத்பவாரை சந்திக்க மறுப்பு தெரிவித்துவிட்டார் என்ற கருத்தை தேசியவாத காங்கிரஸ் மறுத்துள்ளது. சமீபத்தில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சரத்பவார் இருமுறை சந்தித்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை உண்டாக்கி அதன் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்ற முயற்சியில் சந்திரபாபு நாயுடு உள்ளார். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி மட்டுமே ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை பெற்றுவிடாது என்பதால் இந்த நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் பிஜு ஜனதா தளம், தெலங்கான ராஷ்ட்ரிய சமிதி முக்கிய பங்காற்றும். கூட்டாச்சியுடன் மத்தியில் ஆட்சி அமையும்போது, மாநிலத்திற்கு போதிய அங்கீகாரம் கிடைக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக பாஜக ஆட்சி அமைவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியிருந்தார். அத்துடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close