[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

“அசோக் லவாசாவின் கோரிக்கை ஏற்பு” - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

sunil-aurora-has-announced-that-election-commissioner-ashok-lavasa

தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்து ஏற்கப்படும் எனத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு ஆணையர்கள் இருப்பது வழக்கம். அதன்படி தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருக்கிறார். ஆணையர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் இருக்கின்றனர். தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை இவர்கள் மூன்று பேரும் கூடி எடுப்பது வழக்கம். 

இதனிடையே தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்துகள் ஏற்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா புகார் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறினார்.

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் விதிமீறல் புகார்களை விரைவாக கையாள்வது குறித்து தேர்தல் ஆணையர்களுக்கு அசோக் லவாசா கடிதம் எழுதியுள்ளார். ஆனால் கிட்டத்தட்ட 1 மாதத்திற்கும் மேலாகியும் அவரின் கருத்து குறித்து மற்ற ஆணையர்கள் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. 

அத்துடன் தேர்தல் விதிமீறல் புகாரில், ஒருவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்போது மூவர் குழுவில் மற்ற இரண்டு ஆணையர்களின் பெருவாரியான கருத்தை குறிப்பிடும்போதும், தன் கருத்தை குறிப்பிடாமல் இருந்ததால் அசோக் லவாசா போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இதுகுறித்து அசோக் லவாசா கூறும்போது, “தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 324-ன் கீழ்தான் வருகிறது. தேர்தல் பரப்புரையில் ஒருவர் விதியை மீறி பேசும்போது, ஏன் பேசக்கூடாது என்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். அப்படியென்றால் ஒருவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும் போதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கருத்தையும் நிச்சயம் குறிப்பிட வேண்டும். ஆனால் இங்கு மூவர் குழுவில் பெருவாரியானோர் எடுக்கும் முடிவு மட்டுமே தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்து ஏற்கப்படும் எனத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கு ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close