[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

டெல்லி 7 இடங்களையும் பாஜக வெல்லும் : கருத்துக் கணிப்பில் வீழ்ந்த ஆம் ஆத்மி..!

exit-polls-2019-bjp-to-make-a-clean-sweep-in-delhi-on-all-7-seats

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்றும் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மத்திய ஆட்சியை தீர்மானிக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனப் பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இந்தக் கருத்து கணிப்புகள் மாநில அளவிலும் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லி உள்ள 7 மக்களவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என டுடேஸ் சாணக்யா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா டிவியும் தலைநகர் டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் பாஜக வெற்றி பெறும் எனக் கணித்துள்ளது. டெல்லியில் தனது உயிருக்கு பாதுகாப்பில்லை, தன்னை பாஜக வஞ்சிக்கிறது எனப் பல அரசியல் வித்தைகளை கையாண்டும் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அங்கு பின்னடைவை சந்திப்பார் எனக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது,  7 தொகுதிகளை பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close