[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

ஏசியுடன், டீ-காபி வசதி : வாக்காளர்களை மகிழ்வித்த வாக்குச்சாவடி

air-conditioned-polling-booth-in-indore-offers-tea-coffee-to-voters

ஜனநாயக கடைமையாற்றும் வாக்காளர்களை மகிழ்விக்க டீ, காபி மற்றும் ஏசி வசதியுடன் இந்தூரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மக்கள் வரவேற்பை பெற்றது.

நாடு முழுவதும் இன்று 7ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், சண்டிகர், பஞ்சாப், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 60.20% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இதற்கிடையே வாக்களிக்கும் மக்களை மகிழ்விக்கும் நோக்கில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் ஏசி வசதியுடன் கூடிய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அத்துடன் அங்கு குடிநீர் வசதி, டீ, காபி, பாதம் பால்,  பிஸ்கட் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் ரத்தக்கொதிப்பு பரிசோதனை, உடலில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வசதிகளை கண்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றனர். அத்துடன் இதுபோன்ற வசதிகளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்படுத்தினால், கட்டாயம் வாக்குப்பதிவு சதவிகிதம் உயரும் என்றும் தெரிவித்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close