[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

chandrababu-naidu-to-meet-sonia-gandhi

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு நடத்தியுள்ளார். 

மக்களவைத் தேர்‌‌தலுக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சிலரை சந்தித்துப் பேசிய அவர், பாரதிய ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் உள்ள, தெலங்‌கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரையும், மெகா கூட்டணிக்கு வரவேற்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக ஆட்சி அமைவதை தடுக்க என்னென்ன முயற்சிகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியை இன்று மீண்டும் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.  பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரைச் சந்தித்து பேசினார். இன்று மாலை அவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி தற்போது சோனியா காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close