[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

பீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் : வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்

patna-polling-was-stopped-at-booth-number-101-102-in-sarkuna-village

பீகார் மாநிலம்  பாட்னாவில் உள்ள சர்குனா கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 101, 102-ம் எண் மையங்களில் வாக்குப்பதிவு  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலப் பிரதேசத்தில் 4, மத்தியப் பிரதேசத்தில் 8, உத்தரப் பிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னாவிலுள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தச் தேசம் பெரியதுதான் என்றாலும் விரைவில் தேர்தலை முடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது. இந்தக் கோடையில் வாக்காளர்கள் உட்பட அனைவருக்கும் இது தொல்லை கொடுக்கக் கூடியது’’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில்  பீகார் மாநிலம்  பாட்னாவிலுள்ள சர்குனா கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 101, 102-ம் எண் மையங்களில் வாக்குப்பதிவு  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோதல் ஏற்பட்டதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close