[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

மக்களவை தேர்தல் பரப்புரை: ஒரு லட்சம் கி.மீ. தூரம் பயணித்த மோடி..!

pm-modi-travels-one-lakh-km-for-lok-sabha-election-campaign-2019

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு லட்சத்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 28ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் தொடங்கிய பிரதமர் மோடி, மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் மே 17 ஆம் தேதி நிறைவு செய்தார். இதுவரை மொத்தம் 142 பொதுக் கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி,‌ 4 பேரணிகளில் பங்கேற்றுள்ளார். மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பிரதமர் நரேந்திர மோடி பயணித்துள்ளார். இது உலகின் சுற்றளவைவிட‌ இருமடங்காகும்.

Image result for modi campaign

பிரதமர் பரப்புரை செய்த, கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடம், உத்தராகண்ட் ‌மாநிலம் ருத்ராபூர், மிகத் தாழ்வான‌பகுதி கேரளாவின் திருவனந்தபுரம். அதிகபட்சமாக ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே நாளில் 4,50‌0 கிலோ மீட்டர் பயணம் செய்து 3 மாநிலங்களில் பிரதமர் பரப்புரை செய்துள்ளார். பிரதமரின் தேர்தல் பரப்புரையில் மொத்தம் ஒன்றரை கோடி மக்கள் பங்கேற்றனர். இது ஜிம்பாப்வே நாட்டின் மக்கள்தொகைக்கு சமம். அதிகபட்சமா‌க கொல்கத்தாவில் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி நடந்த பிரதமரின் பொதுக் கூட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். தேர்தல்‌ பரப்புரை காலத்தில் 10 ஆயிரம் தொண்டர்களுடன் மோடி பேசியுள்ளார். பிரதமரின் பரப்புரைக் களத்தில் மத்திய பிரதேசத்தின் இட்டார்சியில் 46 டிகிரி செல்சியஸ்‌ வெப்ப நிலை இருந்தது. அருணாச்சல பிரதேசத்தின் இலோ நகரில் 18 டிகிரி வெப்பநிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close