[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

“இந்திரா காந்தி போல் நானும் கொல்லப்படுவேன்” - கெஜ்ரிவால் அதிர்ச்சி

arvind-kejriwal-says-he-will-be-assassinated-like-indira-gandhi

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போல, தனி பாதுகாவலராலேயே தான் கொல்லப்படலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பஞ்சாபில் உள்ள செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், பாஜகவினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும், ஒருநாள் அந்தக் கட்சி தன்னை கொன்றுவிடும் என்றும் கூறியுள்ளார். அண்மையில் டெல்லி மோதி நகரில் நடந்த பேரணியின் போது, கெஜ்ரிவால் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். பின்னர், காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் என்றும், கட்சி மேலிடத்தின் மீதான ‌அதிருப்தி காரணமாகவே, கெஜ்ரிவாலை  அறைந்ததாகவும் காவல்துறையினர் கூறியிருந்தனர். 

ஆனால், பாஜகவே இதற்கு காரணம் என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியிருந்தது. தற்போது அளித்தப் பேட்டியிலும், இந்தச் சம்பவத்தை குறிப்பிட்ட கெஜ்ரிவால், தான் படுகொலை செய்யப்பட்டாலும், கட்சித் தொண்டர் தான் அதற்கு காரணம் எனக் காவல்துறையினர் கூறிவிடுவர் எனக் குற்றஞ்சாட்டினார். 

கட்சி மேலிடத்தின் மீது கோபம் அடைந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், பஞ்சாப் முதல்வரை அறை‌வாரா? என்று வினவினார். அத்துடன் பாஜக தொண்டரால் பிரதமர் மோடியை அறைய முடியுமா ? என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close