[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

காதலியை பார்க்கச் சென்ற பிரபல ரவுடி: துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார்

haryana-man-wanted-for-11-murders-held-from-lucknow

பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜய் ஃபார்மனாவை டெல்லி போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். 

ஹரியானாவைச் சேர்ந்த  விஜய் ஃபார்மனா, பாலியல் வன்கொடுமை, 11 கொலைகள் என 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். பல ஆண்டுகளாக அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் ஏப்ரல் மாதம் விஜய் ஃபார்மனாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து நாகலாந்தில் உள்ள அரசியல் வாதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு ரூ.80 லட்சம் பணமும், விலையுயர்ந்த கார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  விஜய் ஃபார்மனாவை போலீசார் தீவிரமாக தேடத்தொடங்கினர்

இது குறித்து தகவல் தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவர், விஜய் ஃபார்மனா ஹரியாணாவில் உள்ள கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுள்ளார். அவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி, தயார் குடும்பத்தலைவி. பாலியல் வன்கொடுமை, 11 கொலைகள் என 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் விஜய் ஃபார்மனா தொடர்புடையவர். தன்னுடைய இடத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதால் ஃபார்மனாவை கண்டுபிடிப்பது  பெரிய சவாலாகவே இருந்தது. 

இந்நிலையில் லக்னோவில் உள்ள வணிகவளாகத்துக்கு தன் காதலியை பார்க்க விஜய் ஃபார்மனா வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை போலீசார் சுற்றிவளைத்தனர். உணவகம் ஒன்றில் அமர்ந்திருந்த விஜய் ஃபார்மனாவை துப்பாக்கி முனையில் கைது செய்தோம். எங்களை கண்டதும் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்தார். விரைவாக செயல்பட்டு அவரை நாங்கள் மடக்கிப்பிடித்தோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close