[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

தனக்கு வந்த கேள்விகளை அமித் ஷா பக்கம் தள்ளிவிட்ட மோடி

narendra-modi-divert-questions-to-amith-shah

பிரதமராக பதவியேற்று 5 ஆண்டுகள் ஆன நிலையில் பிரதமர் மோடி முதன்முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இருப்பினும் இந்நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை.

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதன்முறை ஆகும். இதில் பேசிய பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி முன்பை விட அதிக இடங்களில் வென்று மீண்டு‌ம் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய பிரதமர், “ கடந்த இரு முறை மக்களவைத் தேர்தல்களின் போது ஐபிஎல் கிரிக்கெட்டை கூட வெளிநாட்டில் நடத்த வேண்டியிருந்தது. ஆனால் அரசு வலிமையாக இருக்கும் போது எல்லாமே சாத்தியம். தற்போது ரம்ஜான், ஹனுமன் ஜெயந்தி, ராமநவமி, நவராத்திரி, பள்ளித் தேர்வு ஏன்? தேர்தல்கூட எல்லாமே அமைதியாக நடந்து வருகிறது. இது இந்தியாவே பெருமைப்பட வேண்டிய விஷயம்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் பங்கேற்றார். பிரதமர் அவர் பேச விரும்பியதை பேசினாரே தவிர, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. மேலும் தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அமித் ஷாவை கைகாட்டினார். கட்சித் தலைவர் என்ற முறையில் அமித் ‌ஷா பதில் அளிப்பார் என மோடி தெரிவித்துவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close