[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
  • BREAKING-NEWS இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS பெரியார் மண்ணான திராவிட பூமியில் எந்த கட்சியை விதைத்தாலும் மலராது - கி.வீரமணி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“முதன்முறையாக செய்தியாளர்களை மோடி சந்தித்ததற்கு பாராட்டுக்கள்” - ராகுல்

rahul-gandhi-reply-for-pm-modi-press-meet

பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும்தான் இந்தத் தேர்தலில் போட்டி என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மறுதினம் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் மிகப் பெரிய அளவில் பணப்பலத்தை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் தங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும்தான் இந்தத் தேர்தலில் போட்டி எனக் குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையம் ஒரு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

மேலும் பேசிய ராகுல்காந்தி, “ பரப்புரையின்போது மோடி எதனைப் பேச விரும்புகிறாரோ அதனைப் பேசலாம். ஏனென்றால் தேர்தல் ஆணையம் அதற்கு அனுமதி கொடுக்கிறது. ஆனால் நாம் பேச நினைத்ததை பேச முயற்சித்தால் தேர்தல் ஆணையம் அதனைத் தடுக்கிறது. தேர்தல் அட்டவணை கூட மோடியின் பரப்புரைக்காக ஏற்படுத்தப்பட்டதுபோல தெரிகிறது.

பிரதமரின் குடும்பத்தை நான் மதிக்கிறேன். என்னுடைய குடும்பம் குறித்து பிரதமர் மோடி விமர்சித்ததை பற்றி நான் கவலைப்படவில்லை. தேர்தல் முடிய சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இப்போதுதான் செய்தியாளர்களை சந்திக்கிறார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போதாவது முதல்முறையாக செய்தியாளரை சந்திக்கிறாரோ அதற்காகவே நான் பாராட்டுகிறேன்.

 ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் என்னுடன் விவாதத்திற்கு தயாராக இல்லை. என்னுடன் ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விவாதம் செய்ய தயாரா..? மே 23-ஆம் தேதி மக்களின் முடிவு என்னவென்று தெரியவரும். அதனைப் பொறுத்து எங்கள் வேலைகளை மேற்கொள்வோம்.” என ராகுல்காந்தி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close