[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல்- திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

ஊரடங்கு உத்தரவை மீறி கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ டிரைவர் - குவியும் பாராட்டு

defying-curfew-in-assam-auto-driver-takes-pregnant-woman-to-hospital

ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் இந்து கர்ப்பிணிக்கு தக்க நேரத்தில் உதவிய முஸ்லிம் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநருக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.

அசாம் மாநிலம் ஹைலகாண்டி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இனவாத மோதல் ஏற்பட்ட நிலையில் அதனைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். தொடர் கலவரம் ஏற்படால் இருப்பதை தடுக்க ஹைலகாண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ரூபன் தாஸின் மனைவியான நந்திதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மருத்துவமனைக்கு சில கி.மீ தூரம் வாகனத்தில் செல்ல வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் ரூபன் தாஸிற்கு யாரும் உதவ முன்வரவில்லை.

இதனையறிந்த ரூபனின் பக்கத்து வீட்டுக்காரரான மக்புல் தனது ஆட்டோ ரிக்ஷாவை எடுத்துக்கொண்டு வேகமாக ரூபன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் ரூபன் மற்றும் நந்திதாவை தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றிய மக்புல் விரைவாக மருத்துவமனை நோக்கி அழைத்துச் சென்றார். 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் தனது வாகனத்தை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்துள்ளார் மக்புல். இதனையடுத்து மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட நந்திதாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக இருக்கும் நிலையில்,  யாரும் உதவ முன்வராதபோது தக்க நேரத்தில் உதவிய மக்புல்லுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதனிடைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான மோனீஷ் மிஸ்ரா, ரூபன்- நந்திதா தம்பதியினரின் குழந்தையை மருத்துமவனையில் சென்று பார்த்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்து முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு இதுபோன்று இன்னும் நிறைய உதாரணங்கள் தேவை என்றார். அத்துடன் தக்க நேரத்தில் உதவிய மக்புல்லுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் தனது பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close