[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

5 வருடங்களாக 16 கொடூரன்களால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் : கலங்கவைக்கும் புகார்

rape-horror-in-up-s-hapur-survivor-was-raped-by-16-men-in-5-years-also-had-a-kid-from-her-rapist

உத்தப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தான் 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அளித்துள்ள புகார் அனைவரையும் அதிரச்செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஹபுர் நகர் காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த ஒரு பெண், தனது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என தீக்குளித்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தற்போது கவனத்தை காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே அந்தப் பெண் தனக்கு நடந்து கொடுமையை புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ஹபுர் கிராமத்தை சேர்ந்த அப்பெண்ணுக்கு 14 வயது இருக்கும் போது திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒரு வருடத்தில் தனது கணவரை பிரிந்து வீட்டிற்கு வந்த அப்பெண், தனது தம்பி மற்றும் தந்தையுடன் வசித்துள்ளார். அந்த நிலையில் ரூ.10 ஆயிரத்திற்காக அப்பெண்ணின் தந்தை மற்றும் அத்தை இருவரும், அந்த சிறுமியை ஒருவரிடம் 2011ஆம் ஆண்டு விற்றுள்ளனர். அவர் அப்பெண்ணை திருமணம் செய்து அழைத்துச்சென்றுள்ளார். அவர்களுக்கு இரண்டு குழந்தையும் பிறந்துள்ளன. 

இந்நிலையில் 2014ஆம் ஆண்டு தான் பணிபுரிந்து அலுலகத்தின் உரிமையாளரிடம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த இயலாமல் அந்த நபர் கடனில் மூழ்கியுள்ளார். இதையடுத்து கடனை திருப்பிக்கேட்கும் வகையில் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்த உரிமையாளர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பலமுறை இந்தக்கொடுமை நடந்துள்ளது. இது அப்பெண்ணின் கணவருக்கு தெரிந்தும் அவர் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணிற்கு கடன் கொடுத்த உரிமையாளரால் குழந்தை பிறந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு அந்த உரிமையாளரின் மூலமாக மேலும் சிலர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அடுத்த ஒருவரிடத்தில் சாமு, கட்டு, மது, விபின், குர்மித், ராமு, அனுஜ், கோபல், சுபாஷ், பிரவின், அருண், சவுராப், நாகினு, கேதார் என மொத்தம் 16 பேர் அந்த பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பெண் பந்தாரா என்ற இடத்திற்கு பணி புரிய சென்றுள்ளார். அங்கு உடன் பணிபுரிந்த ஒருவரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார். 

அந்த நபர் அப்பெண்ணை அந்த கிராமத்தில் இருந்து அழைத்துக்கொண்டு வேறு கிராமத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். ஆனால் இரண்டாம் கணவருக்கு கடன் கொடுத்த அந்த உரிமையாளர் அப்பெண்ணையும், தற்போது வாழும் கணவரையும் போனில் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளார். இதையடுத்து தான் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். அதை அலட்சியப்படுத்தவே அப்பெண் தீக்குளித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்க காவல்துறையினர் 16 பேருக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் பெண்ணின் இரண்டாவது கணவர் இந்தப் புகாரை பொய் என்று மறுத்துள்ளார். இதற்கிடையே அப்பெண் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் உதவி எண்ணிற்கு புகார் கொடுக்க அழைத்து தோல்வியடைந்துள்ளார். இதுதொடர்பான கடிதம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close