[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

குறைபாடுள்ள வெடிபொருட்களால் நடக்கும் விபத்துகள் - இந்திய ராணுவம் குற்றச்சாட்டு

indian-army-complaint-to-central-government

ராணுவத்தில் பயன்படுத்தப்‌படும் வெடிமருந்துகள் குறைபாடுகளுடன் தயாரிக்கப்படுவதால் அதிகளவு விபத்துகள் நிகழ்வதாக இந்திய ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பொதுத்துறையைச் சேர்ந்த 41 வெடிமருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள்தான், இந்திய ராணுவத்திற்கு அதி‌களவு வெடிமருந்துகளை வழங்குகின்றன‌. இந்நிலையில் பீரங்கி, போர் விமானங்கள், துப்பாக்கி உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் குறைபாடுகள் நிறைந்ததாக இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, இந்திய ராணுவம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் புகார் தெரிவித்துள்ளது. அதில், ராணுவத்திற்கு பெரு‌மளவு வெடிபொருட்கள் வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகளில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனால் விபத்துகள் ஏற்பட்டு ராணுவ வீரர்கள் காயமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணுவ கருவிகள் பழுதடைவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

மேலும், உபகரணங்களைப் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு நம்பிக்கை இழந்துவிடுவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெடிமருந்துகள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் தரக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு தீவி‌ர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை செயலர் தெரிவித்த‌தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close