[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

2014-ஐ விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: ராஜ்நாத் சிங்

bjp-will-win-more-seats-than-in-2014-rajnath-singh

’’2014 ஆம் ஆண்டு பெற்ற இடங்களை விட அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்’’ என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, ‘’2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட அதிக இடங்களில் பாஜக தலைமை யிலான கூட்டணி வெற்றி பெறும். மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்போம். அப்போது பாஜக மீதும் மோடி மீதும் மக்கள் வைத்த நம்பிக்கையை இப்போதும் வைத்திருக்கிறார்கள். அதனால் எங்கள் கூட்டணியின் வெற்றி நிச்சயமானது. 

2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோடியா, சோனியா காந்தியா/மன்மோகன் சின்கா என்ற போட்டி நிலவியது. ஆனால், இப்போது போட்டியே இல்லை. மோடிக்கு எதிராக யாருமே இல்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close