[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

தொடர் பாலியல் வன்கொடுமை தாளாது தீ குளித்து பெண் தற்கொலை முயற்சி? 

up-woman-sold-by-father-raped-sets-herself-on-fire-alleging-police-apathy

உத்திரப்பிரதேசத்தில் தொடர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை போலீசார் ஏற்க மறுத்ததால், மனமுடைந்த பெண் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உத்திரப்பிரதேசம் மாநிலம் மீரட் அருகேயுள்ள ஹபூர் பகுதியைச் சேர்ந்த 30வயது பெண் ஒருவர் தீவைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 70% தீக்காயங்களுடன் அவர் தற்போது டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அப்பெண் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், போலீசாரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, ''தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அவரது தந்தையும், உறவுக்கார பெண் ஒருவரும் சேர்ந்து கடந்த 2014ம் ஆண்டு ரூ.10ஆயிரத்துக்கு விற்றுள்ளனர். அப்பெண்ணை வாங்கிய நபர், பல வீடுகளுக்கு அவரை வீட்டு வேலைக்காக அனுப்பியுள்ளார். 

வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சில இடங்களில் சித்திரவதைக்கும் அப்பெண் ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் காவல் நிலையத்தை அப்பெண் அணுகியுள்ளார். ஆனால் அவரது புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹபூர் மாவட்ட காவல் ஆய்வாளர் யஷ்வீர் சிங், ''பாலியல் வன்கொடுமை தொடர்பாக 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென உத்திரப்பிரதேச முதல்வருக்கு டெல்லி தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close