[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

ஐதராபாத் இளைஞர் லண்டனில் கொலை: மத்திய அரசின் உதவியை நாடும் குடும்பம்!

hyderabadi-stabbed-to-death-in-london

ஐதராபாத் இளைஞர், லண்டனில் குத்திக் கொல்லப்பட்டார். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உதவியை அவரது குடும்பம் நாடியுள்ளது. 

ஐதராபாத், நூர்கான் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நதிமுதீன். இவர் லண்டனில் உள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஆறு வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இவர் மனைவியும் லண்டனில் பணியாற்றி வருகிறார். வழக்கமாக வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பிவிடும் நதிமுதீன், கடந்த புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பவில்லை. 

இதையடுத்து டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்திடம் அவர் மனைவி விசாரித்தார். அப்போதுதான் நதிமுதீன், பார்க்கிங் பகுதியில் கொல்லப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. அவரை அவருடன் பணியாற்றிய, ஆசியாவை சேர்ந்த ஒருவர் குத்திக் கொன்றுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவதற்கு அவரது குடும்பத்தினர் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியை நாடியுள்ளனர். 

‘’உடலை இந்தியாவுக்கு கொண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகும். லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். நதீம், இன்னும் சில நாட்களுக்குள் இங்கிலாந்தின் குடியுரிமையை பெற இருந்தார். அதற்குள் இப்படியாகிவிட்டது. எதற்காக இந்த கொலை நடந்தது என்று தெரியவில்லை. நதீம் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார்’’ என்று நதீமின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close