[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

ஒரு வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை? - தாய் மாமன் தலைமறைவு

uncle-rapes-toddler-at-wedding

18 மாத குழந்தை தூரத்து வழி தாய் மாமாவினால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தைக்கு தூரத்து தாய் மாமன் உறவு வரும் இளைஞர் ஒருவரும் அத்திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்.  சிறிது நேரம் குழந்தையை தூக்கி வைத்திருத்த அவர், அதன்பின் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை.

இதனையடுத்து குழந்தையை தாய் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதனிடையே திருமணம் நடைபெற்ற இடத்திற்கு 400 மீட்டர் தொலைவிலுள்ள புதரில் குழந்தை ரத்தம் வெளியேறிய நிலையில் சுயநினைவின்றி கிடந்துள்ளதை சிலர் பார்த்துள்ளனர்.

இக்குழந்தை திருமணத்தில் காணாமல் போன ஒன்றரை வயது குழந்தை எனத் தெரியவந்தது. குழந்தையின் வயிற்றுப் பகுதியில் ரத்தம் அதிகம் வெளிப்பட்டிருந்ததால் குழந்தையை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட குழந்தையுடன் அவரது தாய் அந்த இடத்திலிருந்த வெளியேறவே முதலில் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அந்த இளைஞரை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close