[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரை !

the-collegium-has-reconsider-the-chief-justices-aniruddha-bose-and-a-s-bopanna

நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும்‌ கவுஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி பரிந்துரை அளிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் தேர்வு அமைப்பான கொலிஜியம் இப்பரிந்துரையை அளித்திருந்தது. ஆனால் பணி மூப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இப்பரிந்துரைகளை ஏற்க மறுத்த மத்திய அரசு, வேறு பெயர்களை பரிந்துரைக்க கொலிஜியம் அமைப்புக்கு அறிவுறுத்தியிருந்தது. 

Image result for collegiumஆனால் ஏற்கெனவே தாங்கள் கூறிய நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் பெயரையே கொலிஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. பணி மூப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனமாக ஆராய்ந்த பிறகே மீண்டும் அதே பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும் கொலிஜியம் தெரிவித்துள்ளது. கொலிஜியம் குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயரை 2வது முறையாக பரிந்துரைத்துள்ளதால் இதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதற்கிடையில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் மற்றும் இமாசலப்பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில் இதில் 27 பேர் மட்டுமே உள்ளனர். 4 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close