[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

“தோல்வியை மறைக்கவே நேரு குடும்பத்தின் மீது பழி” : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி

modi-like-schoolboy-who-failed-to-do-homework-priyanka

பிரதமர் நரேந்திர மோடி தனது தோல்விகளை மறைக்கவே நேரு குடும்பத்தின் மீது வீண் பழியை சுமத்துகிறார் என பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தேர்தல் பரப்புரை கூட்டத்தில், காங்கிரஸ் தொடர்ந்து வாரிசு அரசியலை முன்னிறுத்தி வருவதாகவும், நாட்டின் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்ட ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பலை சொந்த கப்பலாக நினைத்து குடும்பத்துடன் 10 நாள் விடுமுறைக்காக பயன்படுத்தி அதன் கண்ணியத்தை பிரதமர் ராஜீவ் காந்தி அவமதித்தார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது குற்றம்சாட்டினார்.

Image result for Modi like schoolboy

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது தோல்விகளை மறைக்கவே நேரு குடும்பத்தின் மீது வீண் பழியை சுமத்துகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீக்ஷித்தை ஆதரித்து தேர்தல் பேரணியில் பங்கேற்ற பிரியங்கா காந்தி, வீட்டுப் பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த சிறுவன் போன்ற நிலையில் தான் பிரதமர் இருப்பதாக விமர்சித்தார். மக்களாகிய ஆசிரியர்கள் ஏதேனும் கேள்விக் கேட்டால், நேரு தனது விடைத்தாளை மறைத்து வைத்து விட்டார் என்றும், அதை இந்திரா காந்தி எடுத்து கப்பல் செய்து தண்ணீரில் நனைத்து விட்டார் என்றும் மோடி பதில் அளிக்கிறார் என்றும் சாடினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close