[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

தந்தை, தம்பி மரணத்தை தாண்டி சாதித்து காட்டிய மாணவி டியா - ஒரு கண்ணீர் கதை

father-brother-killed-in-accident-on-exam-eve-ghaziabad-girl-scores-92-4-in-class-10

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு முன்தினம் தனது தந்தை மற்றும் தம்பியை இழந்த மாணவி தேர்வில் 92.4% மதிப்பெண் பெற்றுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த மாணவி டியா சிங். இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பு ஒரு பெரும் துயர சம்பவத்தை சந்தித்துள்ளார். அதாவது தேர்வு எழுதவதற்கு முன் தினம் இரவு இவரது தந்தையும் தம்பியும் இருச்சக்கர வாகனத்தில் உணவு வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது சாலையில் ஏற்பட்ட விபத்தில் லாரி ஒன்று டியாவின் தந்தை சென்ற இருச்சக்கர வாகனத்தின் மீது ஏறியுள்ளது. இந்த விபத்தில் டியாவின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது தம்பி மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு முழுவதும் தனது தம்பியுடன் மருத்துவமனையில் இருந்த டியா காலையில் தேர்வு எழுத சென்றுள்ளார். 

தேர்வு எழுதிய பின்பு வந்து தனது தந்தைக்கும் , மருத்துவமனையில் இறந்துபோன தம்பிக்கும் நடைபெற்ற இறுதி சடங்கில் பங்கேற்றார். இதுகுறித்து டியாவின் தாய் ரீனா சாகர், “தேர்விற்கு முதல் நாள் டியாவின் தந்தை விபத்தில் இறந்துவிட்டார். அவளது தம்பி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தான். இதனால் நானும் டியாவும் இரவு முழுவதும் மருத்துவமனையில் அழுது கொண்டே அமர்ந்திருந்தோம்.

எனினும் காலையில் டியா தனது தேர்வு எழுத சென்றுவிட்டாள். அதன்பிறகு வந்து இறுதி சடங்கில் கலந்துகொண்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் டியா மனம் தளராமல் அவளது தந்தை கூறிய வார்த்தைப்படி நடந்துகொண்டாள். ஏனென்றால் விபத்து ஏற்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு டியாவின் தந்தை அவரிடம் நீ நன்றாக பள்ளிப்படிப்பை முடித்து டாக்டர் ஆக வேண்டும் எனக் கூறினார். அதற்கேற்ப தேர்வை எழுதி 92.4% மதிப்பெண் எடுத்துள்ளார். எனவே அவரது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் டியா செயல்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார். 

தேர்வு முடிவு குறித்து டியா, “இன்னும் நானும் எனது தம்பியும் போட்ட சண்டைகள் என் நினைவில் இருந்து நீங்கவில்லை. எனது தேர்வு முடிவை என் தந்தை பார்த்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். எனது தந்தை மற்றும் தம்பி ஆகியோருக்கு விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால் நான் இன்னும் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பேன். இந்த விபத்து எனக்கு பிடித்தவர்களை என்னிடம் இருந்து பறித்து கொண்டது” எனக் கூறினார்.

மேலும் டியா குறித்து அவரது பள்ளி முதல்வர், “இந்த மாணவியின் மன தைரியத்தை கண்டிப்பாக பாராட்டவேண்டும். இத்தகைய இக்கட்டான சூழலிலும் விடா முயற்சியாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். இவருக்கு 11 மற்றும் 12 வகுப்பிற்குகான கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவரின் தாய்க்கும் எங்கள் பள்ளியில் ஆசிரியர் வேலை தர முன்வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close