[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை வாக்குப்பதிவு கோரிக்கை: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

ec-rejects-plea-for-advanement-of-poll-timings-during-ramzan

ரம்ஜானையொட்டி அதிகாலையிலேயே வாக்குப்பதிவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு 4 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று 5-வது கட்டமாக 51 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் ரம்ஜானையொட்டி இன்னும் நடைபெறவிருக்கும் 5 மற்றும் 6-வது கட்ட மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு பதிலாக 4 மணிக்கே தொடங்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் முகமது நிஜாமூதின் பாஷா கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில், “ தேர்தலை எந்தவித தவறும் இல்லாமல் நடத்தி முடிக்க இப்போதே தேர்தல் அதிகாரிகளுக்கு சுமார் 15 முதல் 16 மணி நேரம் ஆகிறது. தேர்தல் அதிகாரிகள் மட்டுமில்லாமல் பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகளும் அவ்வளவு நேரம் பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.

தேர்தலை காலை 4 மணிக்கே தொடங்கினால், பூத் ஏஜெண்டுகளும் முன்கூட்டியே வர வேண்டியிருக்கும். ஆனால் தற்போது 6 மணிக்கு வர வேண்டிய பூத் ஏஜெண்டுகள் கூட சரியாக அந்த நேரத்திற்கு வருவதில்லை. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் காலதாமதம் ஆகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மக்களவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close