[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

காஷ்மீரில் பாஜக தலைவர் கடத்திக் கொலை: பிரதமர் மோடி கண்டனம்

pm-modi-condemns-killing-of-bjp-leader-in-south-kashmir

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் குல் முகமது மிர், பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனந்த்நாக் மாவட்டத்தில் நவ்கம் என்ற பகுதியில் இருக்கும் குல் முகமது மிர் வீட்டுக்கு மூன்று பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். முகமது மிர்ரின் காரில், அடல் என்ற பகுதிக்கு பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குல் முகமது மிர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அனந்த்நாக் மாவட்ட பாஜக துணைத் தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குல் முகமது மிர் உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பாஜகவை வலுப்படுத்த, அவரது ஆற்றிய பங்களிப்புகள் நினைவு கூறப்படும் என்றும் நாட்டின் எந்த பகுதியிலும் வன்முறையை நடத்த இடமில்லை எனவும் மோடி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close