[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

வேலை வாங்கி தருவதாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் தலைமறைவு

woman-raped-by-29-year-old-on-pretext-of-giving-job

வேலை வாய்ப்பு குறித்து பேசுவதற்காக வீட்டிற்கு வந்த இளைஞர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வயது 24. இவருக்கு 29 வயது இளைஞர் ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளர். பின்னர் அந்த இளைஞர் கடந்தாண்டு சுதாவின் சகோதரிக்கு வேலை கிடைக்க உதவியுள்ளார். 

இந்நிலையில் சுதாவின் கணவர் வேலை விசயமாக வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில், அந்த இளைஞர் சுதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். வேலைவாய்ப்பு தொடர்பாக பேசவேண்டும் எனக் கூறிக்கொண்டு வந்த அந்த இளைஞர், சுதாவை  கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து சுதா இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  ஆனால் சுதா புகார் கொடுத்ததை அறிந்த அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள  போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

இதேபோல மற்றொரு சம்பவமாக கணவரை கொலை செய்ய ஆண் நண்பருடன் சதித் திட்டம் தீட்டியதாக பெண் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி உஷ்மான்பூர் பகுதியை சேர்ந்த 42 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டு படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். இதுதொடார்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ஆண் நண்பருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close