[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

இடிந்து விழுந்த ஹைதராபாத் சார்மினார் கட்டடம்    

hyderabad-s-iconic-charminar-damaged-as-portion-of-minaret-falls-off

ஹைதராபாத்திலுள்ள முக்கிய கட்டடமான சார்மினாரின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்துள்ளது. 

ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டடம் சார்மினார். இந்தக் கட்டடம் 1591ஆம் ஆண்டு குதூப் மன்னன் முகமது குலி குதூப் ஷாவினால் கட்டப்பட்டது. இக்கட்டடம் 160 அடி உயரம் கொண்டது. 428ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இன்று அதிகாலை இடிந்து கீழே விழுந்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து சார்மினார் காவல்துறையினர், “சார்மினாரின் தென்மேற்கு திசையிலுள்ள ஒரு பகுதி இடிந்து கீழே விழந்தது. விழுந்த நேரம் அதிகாலை என்பதால் சாலையில் யாரும் இல்லை. அதனால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று தொல்லியல்துறை அதிகாரிகள் சார்மினாரை ஆய்வு செய்தனர். அதன்பிறகு அதிகாரி ஒருவர், “இம்முறை சார்மினாரின் 2மீட்டர் நீளமும் 88 செண்டிமீட்டர் அகலமும் அளவிலான பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்தப் பகுதி இடிந்து விழுந்ததன் மூலம் சார்மினாரில் உள்ள விரிசல்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே 2010ஆம் ஆண்டு பெய்த கனமழையில் சார்மினாரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அத்துடன் சார்மினாரின் சில பகுதிகள் பெயர்ந்து விழுந்துள்ளது. தற்போது சார்மினாரில் சீராய்வு பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close