[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

"என்னை கொல்ல காங்கிரஸார் கனவு காண்கின்றனர்"- பிரதமர் மோடி

congress-people-hate-me-so-much-they-dream-of-killing-me-pm-modi

காங்கிரஸ் கட்சியினர் தன்னை கொல்ல வேண்டும் என கனவு காண்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு 4 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் நோக்கமே குடும்ப வழி ஆட்சி நடத்துவதும், நேர்மையற்று ஊழல் செய்துவமே என குறிப்பிட்டார். வளர்ச்சி திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் பாஜக போராடி வருவதாக தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் ஆட்சி பதவியேற்ற முதல் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை நிலவுவதாகவும், ஆனால் அது சரிசெய்யப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியினர் தன் மீது அதிக வெறுப்பு கொண்டிருப்பதாகவும், கொல்ல வேண்டும் என கனவு காண்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் மத்தியப் பிரதேசம் மற்றும் நாட்டு மக்கள் தன் பக்கம் இருந்து போராடிக் கொண்டிருப்பதை காங்கிரஸ் கட்சியினர் கவனிக்க மறந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

சர்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை, பயங்கரவாதம் தொடர்பாக பாதுகாப்பு படையினரிடம் பேச காங்கிரஸ் கட்சி இந்தியாவிற்கு அழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் அவரின் டிவி சேனல்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close