[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

விசாரணையில் பங்கேற்க இயலாது : தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண் 

woman-who-alleged-sexual-harassment-by-cji-decides-not-to-participate-in-enquiry

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியர், நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணையில் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க, உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா‌, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்தக் குழுவின் விசாரணை நடைபெற்றது. 

Image result for sexually abusing the Chief Justice

இந்நிலையில், பாப்டே குழுவின் விசாரணையில் இனிமேல் பங்கேற்கப் போவதில்லை என்று தலைமை நீதிபதி மீது புகார் கூறிய பெண் தெரிவித்துள்ளார். ஏன் இவ்வளவு தாமதமாக புகார் அளித்தீர்கள் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப கேட்கப்படுவதாகவும், தனது வழக்கறிஞரை உடன் இருக்கச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். விசாரணையின்போது தனது வாக்குமூலம் வீடியோ, ஆடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீதான புகார் என்பதை விசாரணை குழு கவனத்தில் கொண்டதாக தனக்குத் தெரியவில்லை என்றும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.‌ 

Image result for supreme court of india

மேலும் புகாருக்கு ஆதாரமாக, தான் கொண்டு சென்ற தொலைபேசி அழைப்பு பதிவுகள், வாட்ஸ் அப் உள்ளிட்ட உரையாடல் பதிவுகளை விசாரணைக் குழுவினர் பொருட்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். விசாகா கமிட்டியின் பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட இந்தக் குழு, அதன் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணை நடத்துவதாக, தான் உணரவில்லை என்றும்,‌ இந்தக் குழுவின் மூலம் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை என்றும் அந்தப் பெண் அதிருப்தி தெரிவித்துள்ளார். விசாரணையின்போது மீண்டும் தன்னை பணியில் சேர அனுமதிப்பதாக நீதிபதி பாப்டே கூறியதாகவும், தனக்கு வேலை பற்றிக் கவலையில்லை, பாலியல் அத்துமீறல் தடுக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் எனக் கூறியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close