[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஒரு உயிரை காப்பாற்ற ரயிலை பின்நோக்கி இயக்கிய ஓட்டுநர் !

driver-reverses-train-in-rajasthan-for-1-km-to-save-life

ராஜஸ்தான் மாநிலத்தில் ரயிலிருந்து தவறி விழுந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற ரயிலை அதன் ஓட்டுநர் பின்நோக்கி இயக்கியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பீனா இடையே பயணிகள் விரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது சரியாக 4 மணியளவில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் ரயிலில் இருந்து கீழே குதிக்க முற்பட்டார். இதனையடுத்து அவரின் உறவினரான வினோத் அவரை பிடிக்க சென்றார். அந்த சமயத்தில் அவர் இரயிலிருந்து கால் தவறி கீழே விழுந்தார். 

இந்த விபத்தில் வினோத் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சகபயணிகள் முடிவு செய்தனர். எனினும் இரயில் நிறுத்தப்பட்டிருந்த பாதை மிகவும் குறுகலான பாதையாக இருந்தது. அதனால் அந்த இடத்திற்குள் ஆம்புலன்ஸ் வர இயலவில்லை.

இந்த இக்கட்டான சூழலில் இரயிலின் ஓட்டுநர் மிக சாதூரியமாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு கிலோமிட்டர் வரை இரயிலை பின்நோக்கி இயக்கி ஆம்புலன்ஸ் வருவதற்கு வழி வகுத்துள்ளார். இதனையடுத்து காயமடைந்த வினோத் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டார். காயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தக்க சமயத்தில் சரியான முடிவை எடுத்து ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close