[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

புதிய தோற்றத்தில் வருகிறது 20 ரூபாய் நோட்டு!

rbi-to-issue-new-rs-20-denomination-banknotes

புதிய தோற்றத்தில் இருபது ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து புதிய வடி வமைப்பில், ரூ.500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய், இருநூறு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. புதிய வண்ணத்தில் ரூ.100, ரூ.50 நோட்டுகளும் வெளியாயின. இந்நிலையில் புதிய வடிவமைப்பில் 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது.

இந்த புதிய ரூபாய் நோட்டு பச்சைக் கலந்த மஞ்சள் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறுபக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகைகளின் தோற்றம் இடம் பெற்றுள்ளது. அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வருகிறது. இது வந்தாலும் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close