[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

வருங்கால மருமகனுடன் சேர்ந்து ஒருதலை காதலரை கொன்ற மாமியார் 

woman-killed-boyfriend-with-help-of-daughter-s-lover

தன்னை காதலிப்பதாகக் கூறி தொல்லைக் கொடுத்த இளைஞரை வருங்கால மருமகனுடன் சேர்ந்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரப்பிரதேசம் மீரட் நகரிலுள்ள அருங்ஷாபுரில் 32 வயது மதிக்கத்தக்க ஆணின் உடலை போலீசார் மீட்டனர். கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொலை தொடர்பாக ஷமிம் என்ற பெண்ணையும், இவரது மகளின் காதலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் கொடுத்த தகவலின்படி, கொலை செய்யப்பட்ட இளைஞர் ராஜிவ்(32) தோட்ட வேலையில் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். ராஜிவ் அதே தோட்டத்தில் வேலை பார்க்கும் ஷமிம் (35) என்பவரை காதலித்துள்ளார். ஷமிமின் 17 வயது மகளும் அதே தோட்டத்தில் தாயுடன் வேலை பார்த்து வந்துள்ளார். ஷமிமின் மகளும் அதே தோட்டத்தில் வேலை பார்த்துவரும் முஷ்கித் (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஓட்டுநர் ராஜிவ் அடிக்கடி ஷமிமின் மகளை பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துவது போல பேசியுள்ளார். அவரின் காதலரான முஷ்கித்தையும் அவமானப்படுத்தியுள்ளார். அதேபோல் ஷமிமையும் வேறு ஆணுடன் தொடர்பு படுத்தி அவமானப்படுத்தியாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த ஷமிமும், அவரது மகளின் காதலரான முஷ்கித்தும் ராஜிவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி ராஜிவை கடந்த 22ம் தேதி இரவு தோட்டத்துக்கு வரவழைத்து மதுக்குடிக்க வைத்துள்ளனர். ராஜிவ் போதையில் சுய நினைவை இழந்ததும் அவரைக் கொலை செய்துள்ளனர். 

இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close