[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

“சேமிப்புக் கணக்கில் 4 ஆயிரம்; கார், நிலம் இல்லை” - வேட்பு மனுவில் மோடி தகவல்

narendra-modi-s-assets-see-52-rise-in-5-years-affidavit-says-0-criminal-case-liabilities

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 52 சதவீதம் உயர்ந்துள்ளது.  

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் தன்னுடைய அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை தெரிவித்துள்ளார். அசையும் சொத்தின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 114.15 சதவீதம் உயர்ந்துள்ளது. 2014ம் ஆண்டில் அவரது அசையும் சொத்தின் மதிப்பு ரூ65.91 கோடி. அரசாங்க சம்பளமும், அதன் மூலம் கிடைக்கும் வட்டியும்தான் மோடிக்கு வருமானம். 

வேட்புமனு தாக்கலின்படி:-

  • அசையும் சொத்து - ரூ1.41 கோடி
  • அசையா சொத்து - ரூ1.10 கோடி
  • ஆக மொத்தம்   - ரூ2.51 கோடி

அசையும் சொத்து:-

  • கையிருப்பு பணம் - ரூ38,750 (2014இல் - ரூ32,700)
  • மோடியின் வங்கி இருப்பு - ரூ4,143 (2014ல் - ரூ26.05 லட்சம்)
  • ஸ்டேட் வங்கியில் நிரந்த வைப்பு தொகை - ரூ1.27 கோடி (2014ல் - ரூ32.48 லட்சம்)

ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள 45 கிராம் எடைகொண்ட 4 தங்க மோதிரங்கள் உள்ளன. 2014இல் அந்த மோதிரங்களில் மதிப்பு ரூ1.35 லட்சம்.

                     

அசையா சொத்து நிலவரம்:

குஜராத்தின் காந்திநகரில் அவருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அவ்வீட்டிற்கு மோடி உட்பட 4 பேருக்கு பங்கு உள்ளது.

  • மோடியின் பொறுப்பில் எவ்வித சொத்துக்களும் இல்லை
  • மோடி மீது எவ்வித குற்ற வழக்குகளும் இல்லை, கார் கிடையாது, வங்கி கடன் எதுவும் கிடையாது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close