[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

மோடி திரைப்பட விவகாரம்: தேர்தல் ஆணைய உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

vivek-oberoi-s-pm-narendra-modi-sc-refuses-to-interfere-with-ec-s-order

’பிஎம் நரேந்திர மோடி’ படத்தை ரிலீஸ் செய்யும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை கதை, ’பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவாகியுள்ளது. ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். இவர், மேரி கோம், சர்ப்ஜித் ஆகிய பயோபிக் படங்களை இயக்கியவர். விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் அஜீத்தின் ’விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்தே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆதாயத்துக்காக காட்சிகள் வைக்கப் பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்தப் படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். இந்த விசாரணையில் தேர்தல் விதிமுறைகளை படம் மீறுவதாக கருதவில்லை எனவும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதையடுத்து படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘இந்தப் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு தேர்தல் நேரத்தில் வெளியிட லாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அதோடு படத்தை, தேர்தல் ஆணையத்திற்கு திரையிட்டுக் காட்டவும் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது. படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், அதை இப்போது வெளி யிடக் கூடாது என குறிப்பிட்டு சீலிட்ட உறையில் அறிக்கையாக கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று, விசாரணைக்கு மீண்டும் வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை வெளியிட தடை விதித்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close