[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

தேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்

post-election-frenzy-kerala-candidates-engage-in-cleaning-up-campaign-waste

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகும் கேரள வேட்பாளர்கள் தொடர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 3 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. கடந்த 23ஆம் தேதி நடந்த 3ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது கேரளா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 

கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டதால், அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதனால் அங்கு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

தேர்தல் பணிகளிலும் வேட்பாளர்கள் அயராது வேலை பார்த்தனர். இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்தும், வேட்பாளர்களின் பணி அங்கு முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தால் ஏற்பட்ட குப்பைகளை தற்போது வேட்பாளர்கள் அங்கு அகற்றிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக எர்ணாகுளம் தொகுதியில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்ட ராஜூவ் தனது ஆதரவாளர்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடச் செய்துள்ளார். அத்துடன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டர்கள் போன்ற குப்பைகளை அகற்றி எர்ணாகுளத்தை சில மணி நேரங்களில் தூய்மையாக்குவோம் எனப் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்துள்ளனர்.

இதேபோன்று பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அல்போன்ஸ் கன்னாந்தனம் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கி அவரும் குப்பைகளை தூய்மைப்படுத்தி வருகிறார். இன்று நடைபெற்று தூய்மை பணியில் ஆதரவாளர்களுடன் இணைந்து சுவரொட்டிகளை அவர் அகற்றினார். இவரைப் போன்று பாஜக கூட்டணி சார்பில் திருவனந்தரபும் தொகுதியில் போட்டியிட்ட கும்மானம் ராஜசேகரன், தனக்கு வந்த சால்வைகள் உள்ளிட பரிசுப்பொருட்களை தலையணைகள் மற்றும் பைகளாக மாற்றி பிறக்கு கொடுத்து வருகிறார். 

Source : The News Minute

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close