பா.ஜ.க. தலைவர்களை நோக்கி விரலை நீட்டுபவர்களின் கைகள் துண்டிக்கப்படும் என்று அக்கட்சியின் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத் தலைவர் சத்பால் சிங் சத்தி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் வாக்கு வேட்டைக்காக எதிர்க்கட்சியினரை விமர்சித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேச பாஜக தலைவர் சத்பால் சிங் சத்தி மேடைப்பேச்சுகளில் வரம்பு மீறிய பேச்சால் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். ஏற்கெனவே ராகுல் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய அவர், மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கியுள்ளார்.
மண்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய சத்பால் சிங் சத்தி , மேடையில் உள்ள பாஜக தலைவர்களையோ, பிரதமர் மோடியையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கையை வெட்டி வீசுவோம் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியை திருடன் என ராகுல்காந்தி கூறியதற்காக, அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் சத்யபால். அந்த வீடியோவும் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ராகுல் காந்தியை பற்றி அவதூறாக பேசியதற்காக 48 மணி நேரம் பரப்புரையில் ஈடுபட சத்பாலுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்