[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

''பாஜகவுக்கு எதிராக விரலை உயர்த்தினால் கைகள் துண்டிக்கப்படும்'' - பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு

will-chop-off-hands-of-those-who-raise-a-finger-at-pm-says-satpal-satti

பா.ஜ.க. தலைவர்களை நோக்கி விரலை நீட்டுபவர்களின் கைகள் துண்டிக்கப்படும் என்று அக்கட்சியின் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத் தலைவர் சத்பால் சிங் சத்தி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் வாக்கு வேட்டைக்காக எதிர்க்கட்சியினரை விமர்சித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேச பாஜக தலைவர் சத்பால் சிங் சத்தி மேடைப்பேச்சுகளில் வரம்பு மீறிய பேச்சால் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். ஏற்கெனவே ராகுல் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய அவர், மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கியுள்ளார். 

மண்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய சத்பால் சிங் சத்தி , மேடையில் உள்ள பாஜக தலைவர்களையோ, பிரதமர் மோடியையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கையை வெட்டி வீசுவோம் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியை திருடன் என ராகுல்காந்தி கூறியதற்காக, அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் சத்யபால். அந்த வீடியோவும் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து  ராகுல் காந்தியை பற்றி அவதூறாக பேசியதற்காக 48 மணி நேரம் பரப்புரையில் ஈடுபட சத்பாலுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close