[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
 • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
 • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
 • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
 • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை

மனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..!

pm-modi-talks-with-akshay-kumar

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரு‌டன் பிரதமர் மோடி தன்‌ இல்லத்தில் க‌லந்துரையாடினார். அப்போது பல்வேறு விஷயங்களை அக்ஷய் குமாருடன் பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். இந்த உரையாடலின் சில முக்கிய அம்சங்கள்..

 • நான் பிரதமர் ஆவேன் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. ஒரு சாதாரண எளிய மனிதனின் எண்ணம் அப்படி இருக்காது. எனக்கு ஒரு எளிய வேலை கிடைத்தால் கூட என் அம்மா , பக்கத்து வீட்டிற்கு எல்லாம் சென்று லட்டு கொடுக்கும் வகையில், ஒரு சாதாரண பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவன் நான்.
 • நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது தேனா வங்கியில் இருந்து எனக்கு வங்கிக் கணக்கு தொடங்கினர். 32 வருடங்களுக்கு பின், சிறிய வயதில் எனக்கு தொடங்கிய அந்த வங்கிக் கணக்கு இன்னும் இருப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நான் குஜராத் முதலமைச்சரான பின், எனக்கான சம்பளம் அந்த வங்கிக்கணக்கில்தான் செலுத்தப்பட்டது. ஆனால் நான் சம்பளம் வேண்டாம் என்று சொன்னேன். இருப்பினும் என் மீது வழக்குகள் இருப்பதால் அந்த பணம் பயன்படும் என்றனர். ஆனால் அதிலிருந்த 21 லட்சத்தை இல்லாத மக்களுக்காவே நான் கொடுத்தேன்.

 • நான் அதிக இடங்களுக்கு செல்பவன். எனக்கான கேள்விகளுக்கு நானே பதில் தேடி கண்டுபிடிப்பேன். சிறு வயதிலிருந்தே நான் நானாகவே வளர்ந்தேன். அதுவே எனக்கு ஒரு பற்றற்ற தன்மையை உருவாக்கியது. என் அம்மாவை என்னுடன் வந்து இருக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் என் அம்மாவே அவரின் கிராமத்திலேயே வசிக்க விரும்பினார். அதுமட்டுமில்லாமல் என் தாயுடன் செலவழிக்க எனக்கும் அதிக நேரமில்லை.
 • நான் அதிக எளிதில் கோபப்படமாட்டேன். ஆனாலும் கோபம் என்பது மனித இயல்பின் ஒரு பகுதியே. கோபம் என்பது எதிர்மறையான எண்ணங்களை பரப்பக்கூடியது. எனது கேரியர் தொடங்கியதில் இருந்து நான் கோபப்படுவதற்கான சூழல் உருவாகவில்லை.

 • கண்டிப்புடன் இருப்பதற்கும் கோபப்படுவதற்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் ஒழுக்கமுடன் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
 • சில நேரங்களில் அதிக உணர்ச்சிவசமாக இருக்கும்போது அதனை ஒரு பேப்பரில் எழுதுவேன். பின்னர் அதனை படித்து ஆராய்ந்து பார்ப்பேன். இதுவே என் தவறுகளை நானே உணர்ந்து திருத்த உதவியது.
 • தேர்தல் நேரம் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எனக்கு பரிசுப்பொருட்கள் அனுப்புவார்கள். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு குர்தாவை அவர் எனக்கு அனுப்புவதுண்டு.
 • மகாத்மா காந்தியால் எப்போதும் நான் ஈர்க்கப்பட்டேன். சுற்றுலாத் துறையை மேம்படுத்த தூய்மையும் முக்கியம். 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது தேசிய சாதனை. அது என் சாதனை அல்ல.
 • சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி வரும் மீம்ஸ்களை பார்ப்பது உண்டு. அதன் படைபாற்றலை கண்டு வியந்திருக்கிறேன். சமூக வலைத்தளங்கள் மூலம் எளிய மனிதர்களின் எண்ணங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
 • சிறு வயதில் நூலகம் சென்று நிறைய புத்தகம் படிப்பேன். பெருந்தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை படிக்க மிகவும் விருப்புவேன். எங்காவது ராணுவ வீரர்களையோ அந்த உடை அணிந்தவர்களையோ பார்த்தால் சிறு பிள்ளைபோல் அங்கேயே நின்று சல்யூட் அடிப்பேன்.

என மோடி மனம்திறந்து பேசியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close