[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

காங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்.பி உதித்ராஜ்

bjp-mp-udit-raj-join-with-congress

மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால் பாஜக எம்.பி உதித்ராஜ் காங்கிரஸில் இணைந்தார்.

வடமேற்கு டெல்லி தொகுதி எம்பியாக இருப்பவர் உதித்ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கோரி வந்தார். ‌கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். 

6 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 12 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிலையில், கிழக்கு டெல்லியில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், புதுடெல்லியில் மீனாட்சி லேகி ஆகியோரை வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது. ஆனால், உதித்ராஜின் கோரிக்கை மற்றும் போராட்டம் காரணமாக, வடமேற்கு தொகுதியின் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில், டெல்லி எம்பிக்களிலேயே தாம் சிறப்பாக செயல்பட்டபோதும், தனக்கான வாய்ப்பு குறித்து பாஜக உறுதிபடுத்தவில்லை என்று உதித்ராஜ் கூறிவந்தார். 

இந்த அதிருப்தியின் தொடர்ச்சியாக, வடமேற்கு தொகுதியின் வேட்பாளர் என்ற அறிவிப்புக்காகக் காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த உதித் ராஜ், வாய்ப்பளிக்கப்படவில்லை எனில் பாஜகவிலிருந்து விலகப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால் பாஜக எம்.பி உதித்ராஜ் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close