[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

பிரதமராவேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை- பிரதமர் மோடி

i-dont-think-i-would-become-pm-narendra-modi

வாழ்க்கையில் துறவியாகத்தா‌ன் விரும்பினேன் என்றும், பிரதமர் ஆவேன் என்று ஒருபோதும் கருதியதில்லை என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரு‌டன் பிரதமர் மோடி தன்‌ இல்லத்தில் க‌லந்துரையாடினார். அப்போது பல்வேறு விஷயங்களை அக்ஷய் குமாருடன் பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். இந்த கலந்துரையாடலின்போது, எதிர்க்கட்சிகளில் கூட தனக்கு நண்பர்கள் இருப்பதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனக்கு வருடாவருடம் குர்த்தாவும் இனிப்புகளும் அனுப்புவார் என்றும் மோடி தெரிவித்தார். தான் தற்போது நகை‌ச்சுவையாக பேசுவதை ‌தவிர்த்து வருவதாகவும் ஏனெனில் தனது பேச்சு திரித்துக் கூறப்பட்டு விடுவதாகவும் மோடி தெரிவித்தார். இருப்பினும் தன்னை வைத்து மீம்ஸ் போடுபவர்களின் படைப்பாற்றலை கண்டு ரசிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் ‌எப்போதும் தோன்றியதில்லை. அது எனது பயணத்தில் தானாக அமைந்தது. நாட்டு மக்களும் என்னை வழிநடத்தினர். எனது குடும்பப் பின்னணி, அரசியலை சார்ந்து இருந்தது இல்லை. எனக்கே வியப்பாக இருக்கிறது. நாட்டு மக்கள் என்மீது அதீத அன்பு வைத்திருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

சிறு வயதில் நூலகம் சென்று நிறைய புத்தகம் படிப்பேன். பெருந்தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை படிக்க மிகவும் விருப்புவேன். எங்காவது ராணுவ வீரர்களையோ அந்த உடை அணிந்தவர்களையோ பார்த்தால் சிறு பிள்ளைபோல் அங்கேயே நின்று சல்யூட் அடிப்பேன். 20 வயதிலேயே பல இடங்களுக்கு தனியாக சென்றுள்ளேன். நிறைய அனுபவம் கிடைத்தது. ஆனால் குழப்பம் நிறைய இருந்தது. பல விஷயங்களில் விருப்பம் இருந்தது. வழிநடத்த யாரும் இல்லை. அடுத்தது என்ன ஆகவேண்டும் என மனதில் பல கேள்விகள் எழுந்தன. பல தடைகளுக்குப் பின் இந்த இடத்துக்கு மக்கள் என்னை அழைத்து வந்துள்ளனர்” என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close