[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

மக்களவை தேர்தலில் வாக்களித்தார் பிரதமர் மோடி

pm-narendra-modi-after-casting-his-vote-at-a-polling-booth-in-ranip-ahmedabad

மக்களவை தேர்தலில் தனது வாக்கினை பிரதமர் மோடி பதிவு செய்தார்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,‌ இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்ப‌திவு நடைபெற்றுள்ளது. 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்‌ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான தனது வாக்கினை பிரதமர் மோடி பதிவு செய்தார். அகமதாபாத்தில் உள்ள ராணிப் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்து, ஜனநாயக கடமையை ஆற்றினார். முன்னதாக, காந்திநகரில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அவரிடம் வாழ்த்து பெற்றார். அத்துடன் தனது தாயிற்கு பிரதமர் மோடி இனிப்பும் வழங்கினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close