[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.

இலங்கை குண்டு வெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு - சுஷ்மா சுவராஜ்

three-indians-death-in-sri-lanka-bomb-blast-sushma-swaraj

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினமான இன்று, கொழும்பு நகரில் உள்ள சில தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. அத்துடன் இரண்டு ஓட்டல்கள், குடியிருப்புப் பகுதி என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் தொடர்புத்துறை துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கை உயிரிழப்புகள் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், “குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக்கிடம் பேசினேன். திலக் கூறும் போது குண்டு வெடிப்பு சம்பவத்தால் 207 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 450 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்திய தூதரகம் அளித்த தகவலின்படி இதுவரை லக்‌ஷ்மி, நாராயண், சந்திரசேகர் என்ற மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று கூறியுள்ளார். 

இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் மருத்துவ உதவிகள் அனுப்பிவைப்படும் என்றும் சுஷ்மா கூறியுள்ளார். அத்துடன் கொழும்புவில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்கு +94777903082, +94112422788, +94112422789 ஆகிய உதவி எண்களை அவர் அறிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close