[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

“பணம் பிடுங்க நினைத்து முடியாததால் பாலியல் புகார்”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

sexual-harassment-on-cji-enquiry-in-sc

பணம் பிடுங்க நினைத்து முடியாததால் தன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பர் ரஞ்சன் கோகாய். இவர் மீது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவரது வீட்டில் வைத்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார்.

இதனிடையே நீதிமன்றத்தை அச்சுறுத்தும் நிலை தொடர்வது குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.. அதில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “ பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண் குற்றப்பின்னணியை சார்ந்தவர். அவர் மீது ஏற்கெனவே இரண்டு எஃப்.ஐ.ஆர்.க்கள் உள்ளன. புகார் கூறியுள்ள பெண், ஒன்றரை மாதங்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார். அப்போதே இந்த புகார் வந்தது. இதுகுறித்து பதிலளிக்க அவசியமில்லை என்று கருதினேன். 

குற்றப்பின்னணி வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அந்தப் பெண் எப்படி உச்சநீதிமன்றத்தில் வேலைக்கு சேர்ந்தார்..? இந்த புகாருக்கு பின்னால் உச்சநீதிமன்றம், மற்றும் தலைமை நீதிபதியின் மாண்பை குலைக்க பெரிய சதி நடக்கிறது என சந்தேகிக்கிறேன். நீதித்துறை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித்துறைக்கு வேலைக்கு வருவதற்கு தயங்குவார்கள்.

அதேசமயம் எனது பதவிக்காலம் முடியும் வரை பயமில்லாமல் பணியாற்றுவேன். நீண்ட புகார் ஒன்றை கூறிவிட்டு உடனடியாக, பதிலளிக்க 10 மணி நேரம் கொடுத்தார்கள். என்னிடம் இருந்து பணம் பிடுங்க நினைத்து முடியாததால் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களாக தூய்மையாக பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்த புகாரை கருதுகிறேன். சுதந்திரமாக பணியாற்றுவதால் பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறேன். அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன்.எனக்கு எதிரான பாலியல் புகார்களை மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள். நான் விசாரிக்க மாட்டேன். அதேசமயம் உச்சநீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் தகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர்.” என கூறியுள்ளார்.

இதில் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அரசுக்கு ஆதரவாக வாதாடும்போது என்னையும் குறிவைக்கின்றனர் என தெரிவித்தார். இதேபோல இந்த புகார் மிரட்டல் விடுக்கும் வகையில் இருப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா தெரிவித்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. இதனை வெளியிட தடையும் இல்லை. ஆனால் ஆதாரமற்ற புகாரை வெளியிடலாமா என்ற பொறுப்புணர்வோடு ஊடகங்கள் செயல்படுங்கள் வேண்டும் என நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close