[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

கார் மரத்தில் மோதி, டிவி நடிகைகள் பரிதாப பலி!

tv-actresses-killed-in-road-accident

தெலுங்கானாவில் நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகைகள் இரண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். 

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர்கள் பார்கவி (20), அனுஷா (21). இவர்கள் நடிக்கும் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு, தெலுங்கானா மாநிலம் விகாராபாத் (Vikarabad ) மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி காட்டுப்பகுதியில் நடந்தது.

இதற்காக இவர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை சென்றனர். ஷூட்டிங் முடிந்து நேற்று காலை ஐதராபாத்துக்கு காரில் திரும்பிக்கொண் டிருந்தனர்.  காரில் பார்கவி, அனுஷாவுடன் வினய் குமார் என்பவரும் இருந்துள்ளார். கரை சாக்ரி ஓட்டினார். 

கார், அப்பாரெட்டி குடா என்ற என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் இருந்து ஒரு லாரி வேகமாக வந்தது. அதில் மோதுவதை தடுக்க, டிரைவர் காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. 

இதில் பார்கவி சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த அனுஷா, சக்ரி, வினய் ஆகியோர், ஐதராபாத் உஸ்மானியா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனுஷா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இளம் நடிகைகள், கார் விபத்தில் ஒரே நேரத்தில் உயிரிழந்தது, தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close