[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

“சசி தரூரை சந்திக்கும் முன்பு யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை” - நிர்மலா சீதாராமன்

nirmala-sitharaman-didn-t-inform-anybody-about-visiting-shashi-tharoor

சசி தரூரை சந்திக்க போகும் முன்பு யாரிடமும் எந்த தகவலையும் தான் தெரிவிக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

கேரள கோவில் ஒன்றில் எடைக்கு எடை வாழைப்பழம் கொடுக்க துலாபாரத் தராசில் அமர்ந்தபோது காங்கிரஸ் பிரமுகர் சசி தரூருக்கு விபத்து ஏற்பட்டது. துலாபாரத்தராசு அறுந்து விழுந்ததில் சசி தரூர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவ்வேளையில் கேரள மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது பரப்புரைக்கு இடையே மருத்துவமனையிலுள்ள காங் எம்பி சசி தரூரை நேரில் சென்று நலம் விசாரித்தார். 

இது குறித்து ட்வீட் செய்த சசி தரூர், ''இந்திய அரசியலில் இந்தப் பண்பு மிக அரிது. அதற்கு நல்ல உதாரணமாக இவரைப் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார். கட்சி பாகுபாடு பார்க்காமல் சசி தரூரை சந்தித்த நிர்மலா சீதாராமனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சசி தரூரை தான் பார்க்க செல்லும் தகவலை யாருக்குமே தெரியபடுத்தவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் கூறியுள்ள அவர், ''சசி தரூர் அடிபட்ட தகவல் கிடைத்தவுடனேயே அவரை சந்திக்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.

விமான நிலையத்துக்கு திரும்பும் போது அவரை சந்திக்க திட்டமிட்டேன். அவருடனான சந்திப்பு குறித்து யாரிடமும் நான் தகவல் தெரிவிக்கவில்லை. என் கட்சி நிர்வாகிகளுடன் கூட நான் எதுவும் சொல்லவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close